பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக, இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்த விமானத்தில் சென்னை கீழ்கட்டளையைச் சோ்ந்த 32 வயது மென்பொறியாளர் வந்துள்ளார். மருத்துவக்குழு பயணிகளை சோதனை செய்தபோது, அவருக்கு காய்ச்சல், சளி தொல்லை இருந்ததைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து அவரை வெளியே அனுப்ப மறுத்த சுகாதாரத்துறையினர், அவருக்கு கரோனோ வைரஸ் அறிகுறி உள்ளதா? என்பதைக் கண்டறிய அவருக்கு கவச உடைகள் அணிவித்து, சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜுவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிரப் பரிசோதணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:கொரானா அச்சுறுத்தல்: கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் முகாமிட்டிருக்கும் மருத்துவக்குழு!