ETV Bharat / state

சென்னை விமானநிலையத்தில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

சென்னை: விமான நிலையத்தில் 'நம்ம சென்னை ஏர்போர்ட் டர்ன்ஸ் பிங்க்' என்ற தலைப்பில் மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

chennai airport cancer awarness
chennai airport cancer awarness
author img

By

Published : Oct 2, 2020, 7:50 AM IST

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், விமான நிலைய அலுவலர்கள், கல்யாணமாயி என்ற நிறுவனம் இணைந்து நம்ம சென்னை ஏர்போர்ட் டர்ன்ஸ் பிங்க் என்ற தலைப்பில் சென்னை விமான நிலையத்திற்கு வரும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம் மூலமாக மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் மாஸ்க் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து விமான நிலையப் பயணிகளுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

chennai airport cancer awarness
நடிகை ரித்விகா கலந்துக்கொண்ட மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதில் உள்நாட்டு விமானப் பயணத்திற்காக சென்ற விமானப்பயணிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வருடாவருடம் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை சென்னை விமான நிலைய அலுவலர்கள் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

பிரதமர் மோடியை ராகுல் காந்தி விரட்டியடிப்பார் - கே.எஸ். அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.