சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பொங்கல் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். போகி பண்டிகையின்போது பழைய பொருள்கள் எரித்ததால் 2018ஆம் ஆண்டு கடுமையான புகை ஏற்பட்டது. இதனால் 118 விமானங்கள் புறப்பாடு, வருகை சேவை பாதிக்கப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளாக விமான நிலைய ஆணையகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஒரளவு விமான போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டு போகி பண்டிகையின்போது சென்னை விமான நிலையம் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக புகை ஏற்படுத்தும் கழிவுப் பொருள்களை எரிக்க வேண்டாம்.
விமான சேவைக்கும் விமான பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி 'தேவை'யில்லை பணம் நோட்டாக; தகுதியால் சேரலாம் 'நீட்'டாக...!