சென்னை: துபாயிலிருந்து ஏா்இந்தியா விமானம் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு நேற்று(ஜன.17) வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது சென்னையைச் சோ்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை சோதனை செய்து, அவர்கள் கொண்டு வந்த சூட்கேஸ் மற்றும் பைகளை திறந்து பார்த்து சோதனை மேற்கொண்டனர். அதில், துணிகளுக்கிடையே இரண்டு மின்சார டிரான்ஸ்பாா்மா்களை மறைத்து வைத்திருந்தனா். அதை கழற்றி பார்த்ததில் இரண்டு தங்க செயின்கள், எட்டு தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் எடை 1.06 கிலோ. அதன் சா்வதேச மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பயணிகளை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குற்றச்செயலைத் தூண்டும் வகையில் கானா பாடல் இருக்கக்கூடாது: காவல் துறை எச்சரிக்கை