ETV Bharat / state

சர்வதேச திரைப்பட விழாவிற்கு நிதி வழங்கிய முதலமைச்சர்! - சென்னை திரைப்பட விழா

சென்னை: சர்வதேச திரைப்பட விழாவிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 75 லட்ச ரூபாய் நிதியுதவியை விழாக்குழுவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சர்வதேச திரைப்பட விழா
author img

By

Published : Nov 18, 2019, 6:47 PM IST

ஆண்டுதோறும் சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும், வரும் டிசம்பர் 12 முதல் 19 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது. சென்னையிலுள்ள 6 திரையரங்குகளில் நடைபெற இருக்கும் இத்திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த நடுவர்களுக்கான விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், 55 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் இதில் திரையிடப்பட உள்ளன . இந்தத் திரைப்பட விழாவிற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்து வருகிறது. அதேபோன்று, இந்தாண்டு நடைபெற உள்ள விழாவிற்கும் 75 லட்ச ரூபாய் நிதியை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழாக்குழுவைச் சேர்ந்த நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரிடம் வழங்கினார்.

இதையும் பார்க்க : ஒப்பற்ற வில்லனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

Intro:Body:சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்ச ரூபாய் நிதியுதவியை விழாக்குழுவிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12 ஆம் தேதிமுதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் 6 திரையரங்குகளில் நடைபெற உள்ளது. இந்திய திரைப்பட சங்கம் நடத்தும் இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த நடுவர்களுக்கான விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த திரைப்பட விழாவில் 55 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்பட உள்ளன . ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு நிதி உதவி செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள விழாவிற்கு 75 லட்ச ரூபாய் நிதியை விழாக்குழுவைச் சேர்ந்த நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.