ETV Bharat / state

“மக்களைத் தேடி மேயர்” திட்டம் ஏன்? ; அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம்

மாநகராட்சி அலுவலகத்திற்கு மக்கள் நேரடியாக வந்து சிரமப்படுவதை தவிர்க்க சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறநிலைய துறை அமைச்சர் பி.கே சேகர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மக்களை தேடி மேயர்
மக்களை தேடி மேயர்
author img

By

Published : May 31, 2023, 7:48 PM IST

சென்னை: திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற “மக்களைத் தேடி மேயர்” முகாமில் கலந்துகொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்களைத் தேடி மேயர் மக்கள் இருக்கும் இடத்திற்கே செல்ல வேண்டும் என தெரிவித்தவர், 2023-24ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் வகையில், கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 331 கோரிக்கை மனுக்களில் 272 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர்? அண்ணா பல்கலைக்கழகம் கேள்வி

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா தலைமையில் “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ் மண்டலம்-6க்கு உட்பட்ட பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான முகாம் இன்று நடைபெற்றது. இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மக்களை தேடி மேயர் திட்டத்தின் மூலம் மேயர் பிரியா நேரடியாக மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்களைத் தேடி மேயர் முகாமில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “கடந்த மூன்றாம் தேதி மக்களை தேடி மேயர் திட்டத்தின் முதல் கட்டமாக மண்டலம் 5 - க்கு உட்பட்ட பகுதியில் மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி அலுவலகத்திற்கு மக்கள் நேரடியாக வந்து சிரமப்படுவதை தவிர்க்க அந்தந்த மண்டலங்களிலேயே மக்களின் வசதிக்காக கோரிக்கை மனுக்கள் நேரடியாக பெறப்படுகிறது சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மக்களை தேடி மேயர் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.

மேலலும், நம்முடைய எஜமானர்களே மக்கள் தான் எனவும் எனவே மக்களை தேடி செல்வதில் எந்த தவறும் இல்லை எனவும் தெரிவித்த அவர் 15 மண்டலங்களில் மனுக்களை பெற்ற பிறகு பகுதிவாரியாக கால்வாய் ஓரங்கள் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களையும் நேரில் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த முகாமில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட் பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: செங்கோல் கட்டுக்கதையா? 1947 ல் நடந்தது என்ன? - பத்திரிகையாளர் இந்து என்.ராம் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.