கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியலினத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக, ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மே மாதம் ஆர்.எஸ். பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றப்பட்டு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜரானார்.
அவருக்கு வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கிய நீதிபதி ரவி, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை - rs bharathi
சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதிக்கு வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
![ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை பாரதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9411927-311-9411927-1604389221910.jpg?imwidth=3840)