ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் - ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் ஒன்று தேர்வினை எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் தேர்வு பயிற்சி வழங்கிய பின் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்

author img

By

Published : Aug 9, 2022, 9:18 PM IST

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2202 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் ஏப்ரல் 26 ஆம் தேதி வரையில் விண்ணப்பித்தனர்.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்க 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 1 ஆயிரத்து 885 பேரும் என மொத்தமாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் ஒன்று(இடைநிலை ஆசிரியர்) தேர்வு முதல்கட்டமாக கம்ப்யூட்டர் வழியில் ஆகஸ்ட் 25 ந் தேதி முதல் 31 ந் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களால் தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் 10 ந் தேதி முதல் 15 ந் தேதி வரையில் கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட உள்ளது.

கம்ப்யூட்டர் தேர்விற்காக பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். இது குறித்த அறிவிப்பு, தேர்வுக்கால அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒன்றிய அரசின் ஐசிடி விருதுக்கு கோவை ஆசிரியர் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.