ETV Bharat / state

சென்னை சென்ட்ரலில் ரயிலுக்காக காத்திருப்பவரா நீங்கள்? இன்று இதை கவனிக்கவும்! - chennai train news

Chennai Central Railway station: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் சேவைகள் மாற்றம்.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 8:41 AM IST

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே உள்ள பாலம், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கான முக்கிய பாலமாகும். இதில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னைக்கு வரும் ரயில் சேவை நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் இதை கவனத்தில் கொண்டு பயணம் மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

ரயில் சேவையில் மாற்றம்: அதன்படி எர்ணாகுளம் ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ் (12521) விரைவு வண்டி, பரௌனி ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 4ஆம் தொடங்கியது. இது ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகத் திருப்பி விடப்பட்டு, திருத்தணியில் நிறுத்தப்படும்.

அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்படும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் (12656), இன்று (டிச.07) காலை 10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில்(12695), இன்று மதியம் 3 மணிக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மங்களூர் சென்ட்ரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12685), இன்று மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மைசூருவில் இருந்து நேற்று (டிச.06) புறப்பட்ட காவிரி எக்ஸ்பிரஸ் (16021) பெரம்பூரில் நிறுத்தப்படும். மும்பையில் மற்றும் டெல்லியில் இருந்து சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரயில் திருத்தணியில் நிறுத்தப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்படும் வந்தே பாரத் ரயில் மற்றும் ஷாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இதையும் படிங்க: இன்று முதல் வழக்கம் போல் இயங்குகிறது சென்னை புறநகர் ரயில்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.