தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி,
வார நாள்கள் ( திங்கள் - சனி)
1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் -150 சேவைகள்
2) சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மார்க்கம் - 64 சேவைகள்
3) சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் - 68 சேவைகள்
4) சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம் - 152 சேவைகள்.
மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாள்களில் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில்
1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் -32 சேவைகள்
2) சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை மார்க்கம் - 24 சேவைகள்
3) சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் - 12 சேவைகள்
4) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம் - 18 சேவைகள்.
மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது. இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை நாளை (ஏப்.22) வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது .