சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் துரைபாண்டியன், ‘மத்திய அரசுக்கு நாடளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்ற ஒரே காரணத்தினால் இந்திய தேசத்தை பாதிக்கின்ற வகையில், பல்வேறு சட்டங்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி வருகிறது.
இதில் குறிப்பாக கடந்த ஜூலை 23ஆம் தேதி பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றும் நோக்கில் 44ஆக இருக்கின்ற சட்டங்களை நான்கு சட்டங்களாக குறைப்பேன் என்று சட்டங்களுக்கு மாற்று திட்டங்கள் வகுத்துள்ளனர். மோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நன்மை செய்வதற்காகத் தான் இச்சட்டங்களை மாற்றி வருகிறார். எனவே இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள தொழிலார்கள் இன்று கருப்பு நாளாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்’ என்றார்.