ETV Bharat / state

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு
மழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Sep 10, 2021, 6:49 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (செப்.10) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (செப்.11) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 12, 13ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 14 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும்.

இதன் காரணமாக வங்க கடல் பகுதிகள், இன்று மற்றும் நாளை மத்திய வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 12 முதல் 14 ஆம் தேதி வரை வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்க கடல் பகுதி, ஒரிசா - மேற்கு வங்க கடலோர பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 14ஆம் தேதிவரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் விவேக் மரணம்: ஒன்றிய அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.