ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் குறித்த வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை செலுத்தும்படி அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Nov 23, 2020, 6:10 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக இறுதிப் பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணங்களை செலுத்தும்படி, அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (நவ.23) விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, இவ்வழக்கில் மாணவர்கள் தரப்பிலான வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது பேசிய அண்ணா பல்கலைக்கழகத் தரப்பு வழக்கறிஞர், விடைத்தாள் திருத்தப்பணி தவிர, மற்ற பணிகளுக்கான செலவுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நியாயமான கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

மேலும், வசூலித்த கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல என டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளதையும் அண்ணா பல்கலைக்கழகத் தரப்பு வழக்கறிஞர் மேற்கோள் காட்டினார். கட்டணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்களின் பின்னணியில் தனியார் கல்லூரிகள் உள்ளன. அவை தங்களை வளப்படுத்திக் கொள்கின்றன. விடைத்தாள் திருத்தப்பணி உள்ளிட்ட, தேர்வுக்கு பின்னர் ஏற்படும் செலவுகளுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், பல்கலைக்கழக நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்” என்றார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.