பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (36). இவர் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், காயத்ரியின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினார்.
இது தொடர்பாக, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளிலிருந்து பெறப்பட்ட அடையாளங்களை வைத்து அந்த நபரைத் தேடி வந்தனர். இந்நிலையில், திருவேற்காட்டில் பதுங்கி இருந்த பாலாஜி என்பவரை தற்போது காவல் துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'மோடி பதவியேற்ற தினத்தை தேசிய கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்' - திருமாவளவன்