ETV Bharat / state

நாட்டிலேயே மிகவும் அசுத்தமானது கூவம் ஆறு: மத்திய அரசு அறிக்கை! - அசுத்தமான ஆறு கூவம்

இந்தியாவில் உள்ள ஆறுகளில் கூவம் ஆறுதான் மிகவும் அசுத்தமான ஆறு என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

நாட்டின் மிக அசுத்தமான ஆறு கூவம் - மத்திய அரசு அறிக்கை!

author img

By

Published : Feb 1, 2023, 7:02 AM IST

சென்னை: 2022ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் உள்ள மாசடைந்த ஆறுகளின் அறிக்கையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 311 மாசடைந்த ஆறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 311 ஆறுகளில் 4,000க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயாலஜிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட் (Biochemical Oxygen Demand) என்ற ஆய்வு முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஒரு நதியில் இருந்து எடுக்கப்படும் 1 லிட்டர் தண்ணீர் தூய்மையான தண்ணீராக மாற தேவைப்படும் ஆக்சிஜனின் அளவைப் பொறுத்து BOD கணக்கீடு செய்யப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு ஆற்றில் எடுக்கப்படும் தண்ணீரில் தூய்மையான தண்ணீராக மாற குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், அந்த ஆறு குறைவாக மாசடைந்து உள்ளதாக கருதப்படும். அதேநேரம் மிக அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், அதிகமாக மாசடைந்து உள்ளதாக எடுத்துக் கொள்ளப்படும்.

இதன்படி, இந்தியாவில் உள்ள ஆறுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கூவம் ஆற்றில் எடுக்கப்பட்ட தண்ணீர்தான், தூய்மையான தண்ணீராக மாற அதிகளவு ஆக்சிஜனை எடுத்துக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. கூவம் ஆற்றில், அடையாறில் இருந்து சத்யா நகர் வரை உள்ள வழித்தடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர், தூய தண்ணீராக மாற 345 மில்லி கிராம் ஆக்சிஜன் தேவைப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆறு மற்றும் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பகிலா ஆறு ஆகியவை அடுத்தடுத்த நிலையில் மிகவும் மாசடைந்த ஆறாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சபர்மதி ஆற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் தூய தண்ணீராக மாற 292 மில்லி கிராம் ஆக்சிஜனும், பகிலா ஆற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் தூய தண்ணீராக மாற 287 மில்லி கிராம் ஆக்சிஜனும் தேவைப்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பக்கிங்காம் கால்வாய் புனரமைப்பு தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.