ETV Bharat / state

மஞ்சள் கண்களுடன் பார்க்கும் ராகுல் காந்தி - சதானந்தா கவுடா கடும் தாக்கு - press meet

சென்னை: ரிசர்வ் வங்கி விவகாரத்தை ராகுல் காந்தி மஞ்சளாக தெரியும் கண்களோடு பார்க்கிறார் என்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு விமர்சனங்களை வைக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா விமர்சித்துள்ளார்.

sadananda gowda
author img

By

Published : Aug 29, 2019, 2:59 PM IST

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சிபெட்டில் மாணவர் விடுதியை திறந்து வைக்க வந்துள்ளதாகவும், 91 அறைகள் கொண்ட இந்த விடுதி 950 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதுவரை 3.5 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்று நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும், இன்னும் 5 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ரிசர்வ் வங்கி விவகாரம் குறித்து ராகுல் காந்தியின் கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்தையும் மஞ்சளாக தெரியும் கண்களோடு பார்க்கக் கூடாது என்றும் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடு என உலக வங்கி தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை விட வேகமாக இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது என்றார்.

ஒருபுறம் வங்கிகள் கடன் தர மறுப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார் என்றும் மறுபுறம் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதையும் குறை சொல்கிறார் எனவும் சாடினார்.

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ராகுல்காந்தி விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ராகுல் அவரது வாழ்க்கையில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்ததே இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

Intro:ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா சென்னை விமான நிலையத்தில் பேட்டி

சிபெட்டில் மாணவர் விடுதியை திறந்து வைக்க வந்துள்ளேன் இது 91 அறைகள் கொண்ட மிகப்பெரிய விடுதி 950 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பின்மை குறித்து நான் இப்போது அதிகம் பேசி வருகிறோம் இளைஞர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளது இதுவரை 3.5 லட்சம் இளைஞர்கள் இதில் பயிற்சி பெற்றுள்ளனர் மேலும் 5 லட்சம் இளைஞருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிரூபித்துள்ளோம் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் பிரதமரின் எண்ணமும் இதுதான் அக்டோபர் 02 தேதி நாட்டில் உள்ள அனைத்து நிறுவனமும் ஒவ்வொரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதனை அழிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது

ரிசர்வ் வங்கி விவகாரம் குறித்து ராகுல்காந்தியின் கருத்துக்கு பதில் அளித்தவர்

அனைத்தும் மஞ்சளாக தெரியும் கண்களோடு அவர் அதனைப் பார்க்கக் கூடாது இந்திய பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடு என உலக வங்கி தெரிவித்துள்ளது அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகளை விட வேகமாக இந்தியப் பொருளாதாரம் முன்னேறி வருகிறது ஒருபுறம் வங்கிகள் கடன் தர மறுப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார் மறுபுறம் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதையும் குறை சொல்கிறார் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ராகுல்காந்தி விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் அவரின் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை அவர் முன் வைத்ததே இல்லை

Conclusion:இவ்வாறு மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.