சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதி அளிக்காததால், அவரது வருகை இந்த ஆண்டு தள்ளிப்போனதாக சிடிஆர் நிர்மல் குமார் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக மொகிந்தர் அமர்நாத் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இப்புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் 14ஆம் தேதி சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது, கலகம் செய்யத்தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்குத்தொடர்பாக சி.டி.ஆர் நிர்மல்குமாரிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்கவுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். குறிப்பாக நாளை (நவம்பர் 2) காலை 11 மணி அளவில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி