சென்னை: பணமோசடி வழக்கு, சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்த வழக்குகளில் கடந்த ஜீன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்று (செப்.30) எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவகுமாரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
நேற்று (செப்.29) அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன் காணொளிக் காட்சி மூலம் புழல் சிறையிலிருந்து செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரின் நீதிமன்றக் காவல் வரும் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சொத்து குவிப்பு வழக்கு - அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!