ETV Bharat / state

டெல்லி திரும்பிய மத்திய ஆய்வுக் குழு!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த வந்திருந்த மத்திய ஆய்வுக் குழுவினர், தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.

corona
corona
author img

By

Published : May 3, 2020, 3:00 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு தமிழ்நாட்டில் எந்த அளவில் உள்ளது என ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் உயர் அதிகாரி டாக்டர்.திருப்புகழ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட மத்தியக் குழு கடந்த 24ஆம் தேதி டெல்லியிலிருந்து சென்னை வந்தது.

இந்த மத்தியக் குழு சென்னையில் ஒரு வாரத்திற்கு மேலாக தங்கியிருந்து, நோயின் தாக்கம், ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதோடு முதலமைச்சா் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசின் உயர் அலுவலர்களை சந்தித்து ஆலோசனைகளை நடத்தினர்.

மேலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவமனைகளை பார்வையிட்டு,நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும் ஆய்வு செய்தனா்.

இந்நிலையல், தனது பணிகளை முடித்துக்கொண்ட மத்தியக் குழுவினர், சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா சிறப்பு தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினர். தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டபோது சேகரித்த தகவல்களை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மத்தியக் குழு அறிக்கையாக அளிப்பார்கள் என தெரிகிறது.

இதையும் பார்க்க: 'கல்வி வணிகம் அல்ல, கட்டணத்தை தள்ளுபடி செய்க'- உச்ச நீதிமன்றத்தில் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.