ETV Bharat / state

'சிறு, குறு நிறுவனங்களிடம் ஜிஎஸ்டி வசூல் செய்யக் கூடாது' - மு.க. ஸ்டாலின் - சிறு, குறு நிறுவனங்களிடம் 6 மாதங்கள் ஜிஎஸ்டி வசூல் செய்யக் கூடாது

ஊரடங்கு காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் ஆறு மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் செய்யக் கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

MK Stalin
MK Stalin
author img

By

Published : May 5, 2020, 12:50 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய கேந்திரங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர், கோவை, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இயங்கும் இந்த நிறுவனங்கள், ஏற்கனவே பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு என அடுத்தடுத்து சோதனைகளைச் சந்தித்து, தற்போது கரோனா நோய் பேரிடரைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக முற்றிலும் நிலைகுலைந்து நிற்கின்றன.

இந்நிலையில், இன்றைய தினம் (மே 4, 2020) மாநிலம் முழுவதும் உள்ள இந்தத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த கூட்டமைப்புத் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினேன். அவர்கள் சந்திக்கும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் குறித்தும், பிரச்னைகளிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தேன்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 'ஊரடங்கு' என்ற மூச்சுத்திணறலில் இருந்து மீண்டு, தொழில்களைத் தொடங்கிடவும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை மீண்டும் தொய்வின்றி வழங்கிடவும் பின்வரும் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகப் பரிசீலனை செய்து நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

1. தொழிலை மீண்டும் தொடங்கவும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் இந்த நிறுவனங்களின் நடைமுறை மூலதனம் (Working Capital) மற்றும் ரொக்கக் கடன் (Cash Limit) வழங்கும் வரம்பை 25 விழுக்காடு உயர்த்தி, குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்

2. கேரளாவில் வழங்கியது போல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), 1 முதல் 2 சதவீதம் இந்நிறுவனங்களுக்கு நிவாரண உதவிகளாக (Relief grant) அறிவிக்க வேண்டும்

3. மூன்று மாதங்களுக்குப் பிறகு மாதாந்திரக் கடன் தவணைகளைச் செலுத்தினால் போதும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தாலும், அந்த மாதங்களுக்குரிய வட்டியைக் கட்ட வேண்டுமென்று தனியார் வங்கிகள் வற்புறுத்துகின்றன. ஆகவே, ரிசர்வ் வங்கி உத்தரவைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்கவும், கடன் தவணை செலுத்துவதை ஆறு மாதத்திற்குத் தள்ளிவைக்கவும், செயல்படாச் சொத்து (NPA) அளவுகோலைத் தளர்த்திடவும் வேண்டும்

4. இந்நிறுவனங்களின் ஊழியர்கள், தொழிலாளர்கள் பணிக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டுகளை, அந்தந்த கிராம நிர்வாக அலுவலரோ, உள்ளாட்சி அமைப்புகளோ வழங்கிட வேண்டும்

5. மின் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்துவதை ஆறு மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும்; இந்தச் சேவைகளுக்கான வைப்புத் தொகையையும் குறைக்க வேண்டும்

6. ஆறு மாதங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலைத் தள்ளிவைப்பதோடு, அந்தப் பாக்கியை இரு வருடங்களில் மாதத் தவணையில் செலுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும்

7. இத்தொழில் துறைக்கு உயிரூட்ட, கடந்த வருடத்தில் செலுத்திய ஜிஎஸ்டி வரியிலிருந்து 10 விழுக்காட்டை அந்தந்த நிறுவனங்களுக்குத் திருப்பி வழங்க வேண்டும்

8. 10 லட்சம் ரூபாய் வரை உள்ள பருவம்சார் கடன்களுக்கு வட்டி கட்டும் கால அவகாசத்தை நீட்டித்துக் கொடுக்க வேண்டும்

9. ஊரடங்கிற்குப் பிறகு இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு 30 விழுக்காடு மானியக் கடன்கள் (Subsidised loans) வழங்கிட வேண்டும். அதற்கு வட்டி வசூல் செய்வதை ஆறு மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும்

10. தொழிலாளர்களின் சம்பளத்தில் 50 விழுக்காடு தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) மூலம் மத்திய அரசு வழங்கிட வேண்டும்

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் தற்போதுள்ள தேக்க நிலைமையிலிருந்து உடனடியாக மீட்டிட வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.