சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர். நகர் மயான பூமியின் எரிவாயு தகன மேடையில், புதிதாக LPG Gas மூலம் எரிக்கப்படும் நவீன மயான பூமி கட்டடம் கட்டுவதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் 21.04.2021 முதல் 20.04.2022 வரை எம்.ஜி.ஆர்.நகர் மயான பூமியில் தகனமேடை இயங்காது.
அதனால் பொதுமக்கள் அருகிலுள்ள நெசப்பாக்கம் அல்லது சைதாப்பேட்டை மயான பூமிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது
அதே போல் திரு.வி.க.நகர் மண்டலம், ஜி.கே.எம்.காலனி பிரதான சாலையிலுள்ள மின்சார ஏரியூட்ட தகன மேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 21.04.2021 முதல் 03.05.2021 வரை அருகிலுள்ள நேர்மை நகரிலுள்ள எரிவாயு மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது' - கமல்