சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த விஜி என்பவர் நேற்று இரவு சூளை ரவுண்டானா அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் விஜியின் இருசக்கர வாகனத்தில் மோதினர். பின்னர் விஜி பாக்கெட்டில் வைத்து இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், செல்போனை பறிக்க முடியாததால் அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து, விஜி இருவரையும் பின் தொடர்ந்து வந்து ஆர்.எம். சாலை மசூதி அருகே மடக்கிய போது, செல்போன் திருடர்கள் இருவரும் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும், அவர்கள் பறித்து வந்த இரண்டு செல்போன்களையும் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெரியமேடு காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்த விஜி, செல்போன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற செல்போன்கள், இரு சக்கர வாகனத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தார். காவல் துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கைபற்றிய செல்போன்கள் இரண்டும் கே3 அமைந்தகரை காவல் நிலைய எல்லையில் பறித்து வந்ததும், இருசக்கர வாகனத்தை திருவெற்றியூர் காவல் நிலைய சரகத்தில் திருடியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சி.சி.டி.வி காட்சிகள் மூலம் செல்போன் திருடர்கள் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்