ETV Bharat / state

CCL 2023: சென்னை ரைனோஸ் Vs மும்பை ஹீரோஸ் இன்று மோதல் - ஜெய்ப்பூர்

2023ஆம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் இன்று தொடங்குகிறது. முதல்போட்டியில் மும்பை ஹீரோஸ் அணியுடன் சென்னை ரைனோஸ் அணி மோதுகிறது.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023
author img

By

Published : Feb 18, 2023, 3:10 PM IST

சென்னை: இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கரோனா தொற்றால் 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு மீண்டும் நடைபெறுகிறது. இந்த தொடரில் 8 மாநிலங்களை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌. சென்னை அணிக்கு ஆர்யா கேப்டனாக உள்ளார். இந்த அணியில் ஜீவா, விஷ்ணு விஷால், பரத், விக்ராந்த், பால சரவணன், பிரித்வி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூரு, ஹைதராபாத், ராய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்றைய போட்டி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை ரைனோஸ் அணி மும்பை ஹீரோஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை ரைனோஸ் அணி இருமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

சென்னை ரைனோஸ் அணியில் ஜீவா கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. பழைய வீரர்கள் உடன் புதிய நபர்களும் இணைந்துள்ளதால், பலமான அணியாக விளங்கும் சென்னை ரைனோஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2023: முழு அட்டவணை, வீரர்கள் பட்டியல்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.