ETV Bharat / state

சென்னை விரைவில் பாதுகாப்பான நகரமாக மாறிவிடும்-ஏ.கே.விசுவநாதன்

உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொள்ளும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை உருவாக்க அனைத்து நடவடிக்கை

author img

By

Published : Jan 28, 2020, 4:40 PM IST

பரங்கிமலை காவல் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நந்தம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

முப்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிண்டி கத்திபாரா முதல் போரூர் வரையில் 121 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும். இதில் 8 கேமராக்கள் வாகனங்களின் எண்களை துல்லியமாக பதிவு செய்யுமெனவும் தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அதிகம் அமைந்துள்ள கிண்டி முதல் போரூர் வரையிலான சாலையில் போக்குவரத்தை சரி செய்யவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மெரினாவில் பலூன் விற்கும் ஏழை தம்பதியின் காணாமல் போன 7 மாத குழந்தையை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்த போது கிடைத்த மன நிறைவுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. இதற்கு முதன்மையாக உதவியது சி.சி.டி.வி. கேமராக்கள் தான் என பெருமிதம் கொண்டார்.

இரண்டு மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற குற்ற சம்பவங்கள் சி.சி.டி.வி. யின் உதவியால் தற்போது செயின் பறிப்பு சம்பவங்கள் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் கடந்த ஆண்டுகளைவிட 50% குறைந்துள்ளதாகவும்.

சி.சி.டி.வி. கேமராக்கள் என்னுடைய யோசனை என கூறுகிறார்கள். ஆனால் இதற்கு காரணம் தமிழக முதலமைச்சர் பழனிசாமி. அவர் கூறியதால் தேவையான இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த ஆரம்பித்தோம். இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சென்னையில் இருந்து வெளியேறுவதற்குள் குற்றவாளியை பிடிக்கும் திட்டத்தை அடுத்து செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்

சென்னை விரைவில் பாதுகாப்பான நகரமாக மாறிவிடும்-ஏ.கே.விசுவநாதன்

நாட்டில் பாதுகாப்பான நகரமாக சென்னை மாறிவருவதற்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் மிக முக்கிய அம்சமாக விளங்கி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியமானது எனவும் கூறினார்.

இதையும் படிங்க :பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது!

Intro:உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொள்ளும் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்Body:உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொள்ளும் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

பரங்கிமலை காவல் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் இயக்கத்தை பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

கிண்டி கத்திபாரா முதல் போரூர் வரையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 121 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 8 கேமராக்கள் வாகனங்களின் எண்களை துல்லியமாக பதிவு செய்யும் 8 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அதிகம் அமைந்துள்ள கிண்டி முதல் போரூர் வரையிலான சாலையில் போக்குவரத்தை சரி செய்யவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் இதன் இயக்கத்தை தொடங்கி வைத்த பின் பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியவை,

மெரினாவில் பலூன் விற்கும் ஏழை தம்பதியின் காணாமல் போன 7 மாத குழந்தையை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்த போது கிடைத்த மன நிறைவுக்கு ஈடு ஏதும் இல்லை. இதற்கு முதன்மையாக உதவியது சி.சி.டி.வி. கேமராக்கள் தான்.

இரண்டு மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தற்போது பெரும் அளவில் குறைந்துள்ளது. செயின் பறிப்பு சம்பவம் தற்போது 50% குறைந்துள்ளது. இதற்கு காரணம் சிசிடிவி தான்.

சி.சி.டி.வி. கேமராக்கள் என்னுடைய யோசனை என கூறுகிறார்கள். ஆனால் இதற்கு காரணம் முதலமைச்சர் தான். அவர் கூறி தான் தேவையான இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த ஆரம்பித்தோம்.

சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சென்னையில் இருந்து வெளியேறுவதற்குள் குற்றவாளியை பிடிக்கும் திட்டத்தை அடுத்து செயல்படுத்த உள்ளோம்.

நாட்டில் பாதுகாப்பான நகரமாக சென்னை மாறிவருவதற்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் மிக முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது.

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்

இடம் : நந்தம்பாக்கம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.