ETV Bharat / state

இந்துப் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு - பாஜக வழக்கறிஞர் பிரிவு

CCB filed case against Thirumavalavan
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
author img

By

Published : Oct 23, 2020, 8:47 PM IST

Updated : Oct 23, 2020, 10:41 PM IST

20:41 October 23

இந்துப் பெண்களைப் பற்றி இழிவாக பேசியதாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், “இந்து பெண்கள் விபச்சாரிகள் என இந்து மத சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளதாக திருமாவளவன் பேசியிருந்தார்.

திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன்,  இந்து பெண்களை கொச்சைபடுத்தும் வகையிலும், இந்து சாஸ்திரங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளை பரப்பி வரும் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில், தொல்.திருமாவளவன் மீது, கலகம் செய்தல், உணர்வுகளை தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சித்தல், இரண்டு மதத்தினரிடையே கலவரத்தை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

இதே போல் ஆவடி, கோடம்பாக்கம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களிலும் திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: திருமாவளவனை திமுக., காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? நடிகை குஷ்பு கேள்வி

Last Updated : Oct 23, 2020, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.