சென்னையில் தங்கம் இறக்குமதி செய்யும் சுரானா நிறுவனத்தில் சிபிஐ அலுவலர்கள் 2012ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் 400 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது. பறிமுதல்செய்யப்பட்ட தங்கத்தை அதே நிறுவனத்தின் லாக்கரில் வைத்து சீலிட்டனர். இந்நிலையில், சீலிடப்பட்ட லாக்கரை அண்மையில் திறந்து பார்த்தபோது, அதில் 103 கிலோ மாயமானது தெரியவந்தது.
லாக்கர்கள் உடைக்கப்படாமல் சீல்கள் அகற்றப்பட்டு தங்கம் திருடப்பட்டதாக அலுவலர்கள் சந்தேகித்தனர். தொடர்ந்து நடத்திய ஆய்வில் கள்ளச்சாவி போட்டு லாக்கரைத் திறந்து தங்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கள்ளச்சாவி போடப்பட்டது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலீப், ஐஜி சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வுசெய்து வருகின்றனர்.
கள்ளச்சாவி போட்டு திருடியது தொடர்பாகத் தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு - பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு