ETV Bharat / state

காவலிலிருந்த தென்கொரிய மோசடியாளர்கள் தப்பியோட்டம்: சிபிஐ விசாரணை

செங்கல்பட்டில் வீட்டுக் காவலில் இருந்த இரண்டு தென்கொரிய மோசடி நபர்கள் வெளிநாடு தப்பிச் சென்ற விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை, தென்கொரிய தூதரக அலுவலர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

author img

By

Published : Feb 11, 2022, 5:12 PM IST

காவலில் இருந்த இரண்டு தென்கொரிய மோசடி நபர்கள் மாயம்

சென்னை: தனியார் நிறுவன நிர்வாகிகளான தென் கொரிய நாட்டைச் சேர்ந்த சோய் யங்சக், சோ ஜெவோன் ஆகியோர் 40 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் 2019ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சொந்த பிணையில் வெளிவந்த இருவரும், காவல் துறை பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர். பின்னர் 2021ஆம் ஆண்டு இருவரும் தங்களை வீட்டுக் காவலில் வைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் சோய் யங்சக், சோ ஜெவோன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கண்காணிப்பில் வீட்டுக் காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் இருவரும் செங்கல்பட்டு சேந்தமங்கலம் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

சில நாள்களுக்குப் பின் இருவரும் திடீரென காணாமல்போன நிலையில், அவர்களுக்கு ஓட்டுநராகப் பணியாற்றிவந்த அருண் குமார் என்பவர் செங்கல்பட்டு பாலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

புகாரில் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டிருந்த சோய் யங்சக், சோ ஜெவோன் ஆகியோருக்கு தான் ஓட்டுநராகப் பணியாற்றி உணவு அளித்து தேவையான உதவிகளைச் செய்துவந்ததாகவும், அப்போது ஒரு நாள் போலியான ஆதார் அட்டை கொடுத்து இம்பால் செல்ல இரு விமான பயணச்சீட்டு எடுத்துக் கொடுக்குமாறு தன்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இருவரும் பெங்களூரு வழியாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கொல்கத்தாவுக்கும், அங்கிருந்து இம்பால் சென்று பின்னர் தென் கொரியா தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் காவல் துறையினர் மோசடி, குற்றச் செயலில் ஈடுபடுதல், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல் புரிதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இரு வெளிநாட்டவரையும் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்த வழக்கில் திடீரென காணாமல்போன இரு தென் கொரிய நாட்டினரையும் கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் உயர் நீதிமன்றத்தில் அம்மனு மீதான விசாரணை நடைபெற்றபோது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவ்வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டு பாலூர் காவல் நிலையத்திலிருந்து இவ்வழக்குத் தொடர்பான ஆவணங்களைப் பெற்ற சிபிஐ மோசடி, போலியான ஆவணத்தைப் பயன்படுத்தி குற்றச் செயல்புரிதல், சட்டத்திற்குப் புறம்பாக நடத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் சோய் யங்சக், சோ ஜெவோன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ அலுவலர்கள் முதற்கட்ட விசாரணை நடத்தி உயர் நீதிமன்றத்தில் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தப்பியோடிய இரு தென் கொரிய மோசடி நபர்களும் வீட்டின் ஜன்னல் வழியாகத் தப்பித்து, தனியார் வாகனம் மூலம் ஹைதராபாத் தப்பிச் சென்றதும், அங்கிருந்து விமானம் மூலம் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு தப்பிச் சென்றதும் பின் அங்கிருந்து தென் கொரியாவுக்கு மியான்மர், தாய்லாந்து வழியாகப் பன்னாட்டு எல்லையைக் கடந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இந்நிலையில் இரு வெளிநாட்டவரும் தப்பிச் சென்றது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை சிபிஐ அலுவலர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். இருவரும் தப்பிச் சென்றது தொடர்பாக போக்குவரத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கிடைக்கப்பெறாத நிலையில் இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போலியான ஆவணங்கள் மூலம் இவர்கள் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உடனிருந்தவர்கள் உதவியோடு வெளிநாடு தப்பி இருப்பதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தென்கொரிய நாட்டவருக்கும் பாதுகாப்பாக இருந்த காவல் துறையினர், இவர்கள் தங்கியிருந்தபோது தொடர்புடையவர்கள் ஆகியோர் குறித்து சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.

இவர்கள் தங்கியிருக்கும்போது மேற்கொள்ளப்பட்ட செல்போன் அழைப்புகளையும் தீவிரமாக சைபர் கிரைம் வல்லுநர்கள் உதவியுடன் ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் கொரியா நாட்டிற்குத் தப்பிச் சென்ற காரணத்தினால் இந்தியாவிலுள்ள தென்கொரிய தூதரக அலுவலர்கள் உதவியுடன்தான் தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு தென்கொரிய நாட்டவரைத் தப்பிக்க உதவிய நபர்களைக் கண்டுபிடிப்பதன் மூலம், தப்பிச்சென்ற இருவரையும் பிடிக்க சிபிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் தென்கொரிய நாட்டில் எங்குப் பதுங்கி உள்ளார்கள் என்பது குறித்தும் அந்நாட்டில் தூதரக அலுவலர்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை சிபிஐ அலுவலர்கள் சேகரித்துவருகின்றனர்.

மேலும், சிபிஐ அலுவலர்கள் இந்தத் தகவலை அடிப்படையாக வைத்து இன்டர்போல் உதவியுடன் தென்கொரிய நாட்டுக்குத் தப்பிச்சென்ற இருவரையும் கைதுசெய்ய திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: டி.எம்.பி. வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.10.73 கோடிக்கு கடன்: 8 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.