சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவர் தன்னை கடத்தி சொத்துகளை அபகரித்ததாக, காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர்கள் சரவணன், ராஜேஷ் கண்ணா, காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் புகார் அளித்தார்.
தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் இந்தப் புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் இதில் தொடர்புடைய காவலர்களுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தினர்.
அதில் காவலர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து டிஜிபிக்கு விரிவான அறிக்கை சிபிசிஐடி தரப்பில் தாக்கல்செய்யப்படவுள்ளது.
சிபிசிஐடி காவல் துறையினர் அறிக்கையை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: நடைமுறைக்கு வந்தது டெல்லி ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டம்!