ETV Bharat / state

பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு - அரியலூர் மாணவி விவகாரம்

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தடையை மீறி போராட்டம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல முக்கிய பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

அண்ணாமலை உட்பட முக்கிய பாஜக உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு

author img

By

Published : Jan 26, 2022, 9:12 AM IST

சென்னை:தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற அரியலூர் மாணவி சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தங்கியிருந்த விடுதியில் அனைத்து அறைகளையும் சுத்தம் செய்யச் சொல்லி வார்டன் வற்புறுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாணவி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் பள்ளியில் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதன் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மதமாற்ற தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்தகோரியும், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ நயினார் ராஜேந்திரன், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், பாஜக மாநில துணை தலைவர் துரைசாமி, பாஜக இளைஞரணி தலைவர் வினோத் பி செல்வம் ,முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராம், பாஜக தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, முன்னாள் தேசிய குழு உறுப்பினர் எச் ராஜா மற்றும் பலர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்ட பிரிவுகளான சட்ட விரோதமாக கூடுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தொற்றுநோய் பரப்பக் கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், தொற்று நோயை பரப்பக்கூடிய தீய எண்ணத்தில் ஆன செயலில் ஈடுபடுதல் மற்றும் சென்னை காவல் சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:பட்டியலினத்தவரை வன்கொடுமை செய்த டிஎஸ்பிக்கு அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.