சென்னை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் மாட்டுக்கறி விருந்துடன் நடைபெற்றது.
இதில் பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்ட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக சட்ட விரோதமாக கூடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், தீ பற்றக்கூடிய பொருள்களை கவனக் குறைவாக கையாளுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடலில் பெயிண்ட் ஊற்றிக் கொண்டு உதயநிதி படம் வரைந்த ஓவிய ஆசிரியர்