ETV Bharat / state

ரூ.9ஆயிரம் கோடி விவகாரம்: வங்கி மீது புகார் கொடுத்த கார் ஓட்டுநர்! - சென்னையில் 9 ஆயிரம் கோடி விவகாரம்

தவறுதலாக வாடகை கார் ஓட்டுநர் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்ட விவகாரத்தில், தற்போது கார் ஓட்டுநரான ராஜ்குமார், சம்பந்தப்பட்ட வங்கியின் மீது சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

9-ஆயிரம் கோடி விவகாரம்
9-ஆயிரம் கோடி விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 5:46 PM IST

Updated : Sep 23, 2023, 10:22 PM IST

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). வாடகை கார் ஓட்டுநரான இவர், தனது நண்பர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக அறை எடுத்து தங்கி, பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி 3 மணியளவில், அவரது தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது வங்கிகணக்கில் அந்த பணத்தை உறுதி செய்வதற்காக, ரூபாய் 21 ஆயிரத்தை அவரது நண்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவரது வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் ஆகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியை தலைமையிடமாக வைத்து இயங்கிவரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை மேலாளர் இது குறித்து ராஜ்குமாரை தொடர்புகொண்டு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறுதலாக பணம் மாற்றப்பட்டுள்ளது என்றும் பணத்தை வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். மேலும் தன் நண்பருக்கு அனுப்பிய ரூ.21 ஆயிரத்தை ராஜ்குமார் திருப்பித் தர வேண்டாமென தெரிவித்த வங்கி அதிகாரிகள், கார் வாங்க கடனுதவி செய்வதாகவும் உறுதியளித்து ராஜ்குமாரை அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இந்தத் தொகை பெரிய அளவில் இருப்பதனால் அவருக்கு ஏதேனும் நேர்ந்துவிடலாம் என எண்ணி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மீது சைபர் கிரைமில் இன்று(செப்.23) புகார் அளித்து உள்ளார். மேலும் அந்தப்புகாரில், தவறுதலாக அவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் யாருடையது என்று கூட தெரியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக வங்கி அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இது குறித்து ராஜ்குமார் கூறியதாவது, "என்னுடைய வங்கி கணக்கை, வங்கியானது, தவறாக பயன்படுத்துகிறது. இது குறித்து வங்கி தரப்பில் இருந்து சரியான தகவலும் அளிக்க வில்லை. மேலும், என் வங்கிக்கணக்கை அவர்கள் எப்படி தவறாக பயன்படுத்த முடியும். இதனால் நான் புகார் அளிக்க வந்துள்ளன். மேலும் நான் எடுத்த 21,000 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கியில் சமரசம் பேசப்பட்டத்தை தவிர, வேறு எதுவும் பேசப்படவில்லை.

9 ஆயிரம் கோடி என்பது, பெரிய தொகை. அது யாருடைய பணம் என்று தெரியவைல்லை. இதனால் எனக்கு என்ன பிரச்சினை வரும் என்றும் தெரியவில்லை. மேலும் வங்கியில் இருந்து, சரியான தகவலும் அளிக்கவில்லை. மேலும் எனக்கு டெபாசிட்டான ரூ.9,000 கோடி குறித்து கேள்வி கேட்டால், அவர்கள் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் அவர்கள் என்னுடைய அறிவுக்கு எட்டாமல் இது போன்ற செயல்களைச் செய்கின்றனர். இதனால் எனக்கு பயமாக இருப்பதால் தான் புகார் அளிக்க வந்து உள்ளேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஹர்தீப் சிங் கொலை! "இந்தியா - கனடா இணைந்து செயல்பட வேண்டும்" - அமெரிக்கா கோரிக்கை!

Last Updated : Sep 23, 2023, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.