சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் நடிகர் கணேஷ். இவர் நடிகை ஆர்த்தியின் கணவர். காமெடி நடிகரான கணேஷ் அரண்மனை, கதிர்வேலன்காதல், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
இவர் கடந்த சனிக்கிழமை (மார்ச் 5) இரவு சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவற்றில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காரில் மோதி கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
![விபத்துக்குள்ளான கார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-actorganeshcaraccident-photo-script-7208368_07032022231051_0703f_1646674851_624.jpg)
இது குறித்து தகவலறிந்து அடையாறு போக்குவரத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணேஷை பார்த்தபோது காரை அங்கேயே விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கணேஷ் வீட்டிற்குச் சென்ற போக்குவரத்து காவல் துறையினர், விசாரணை செய்தபோது அவர் வீட்டில் இல்லை என அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
கணேஷ் தலைமறைவான நிலையில் அவர் மதுபோதையில் காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தினாரா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இசையமைப்பாளரை மிரட்டிய இயக்குநர் - கோடம்பாக்க பஞ்சாயத்து