ETV Bharat / state

கிண்டி தொழிற்பேட்டை அருகே கார் விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு - Car accident near Guindy IE

கிண்டி தொழிற்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 28, 2022, 10:29 AM IST

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து கிண்டி தொழிற்பேட்டை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத வாகனத்தின் பின்புறம் மோதி கார் விபத்துக்குள்ளானது. அங்கு இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் மேற்கொண்ட சோதனையில் காரின் உள்ளே ஓட்டுநர் மட்டும் இருந்ததும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த கார் ஓட்டுநர் சென்னை எழும்பூர் கங்குரெட்டி தெருவை சேர்ந்த முருகன் (47) என தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து கிண்டி காவல்துறையினர் வாகனத்தை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உபியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 10 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.