சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விடைபெற்ற கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி நிமிடங்கள்! - விஜயகாந்த் லைவ்
Published : Dec 29, 2023, 3:10 PM IST
|Updated : Dec 29, 2023, 7:29 PM IST
19:05 December 29
விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்!
19:02 December 29
இறுதி சடங்குகள் முடிந்தது!
விஜயகாந்த் உடலுக்கு இறுதி சடங்கு முடிவடைந்த நிலையில், அவரது உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டது.
18:36 December 29
செல்போன் டார்ச் லைட் அடித்து அஞ்சலி!
விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், மக்கள் என ஏராளமானோர் செல்போன் டார்ச் லைட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.
18:22 December 29
குடும்பத்தினர் சார்பில் இறுதி சடங்குகள்!
விஜயகாந்த் உடலுக்கு அவரது குடும்பத்தினர் சார்பில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
18:15 December 29
குடும்பத்தினர் இறுதி மரியாதை!
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
18:04 December 29
குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு மரியாதை!
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
18:00 December 29
இறுதி அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர்!
மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
17:59 December 29
இறுதி சடங்கிற்கு முதலமைச்சர் வருகை!
விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
17:55 December 29
முழு அரசு மரியாதையுடன் சற்று நேரத்தில் நல்லடக்கம்!
தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட விஜயக்கந்தின் உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு வந்தடைந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் அரசின் முழு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
17:47 December 29
கோயம்பேடிற்கு வந்தடைந்த விஜயகாந்த் உடல்!
தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட விஜயக்கந்தின் உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு வந்தடைந்தது.
17:38 December 29
சற்று நேரத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!
இன்னும் சற்று நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல் அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
17:32 December 29
இறுதி சடங்கு ஏற்பாடுகள் தயார்!
கேயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாத்தின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
17:15 December 29
8 எல்இடி திரைகள் அமைப்பு!
விஜயகாந்தின் இறுதி சடங்கினைக் காண பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்படாத நிலையில், தேமுதிக அலுவலகம் முன்பு 8 எல்இடி திரைகள் அமைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17:11 December 29
மலர் பாதையில் மறைந்த விஜய்காந்த் இறுதி ஊர்வலம்!
ஊர்வலம் கடந்து செல்லும் சாலைகளின் இரு புறமும் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
17:08 December 29
5 கி.மீ கடந்த இறுதி ஊர்வலம்!
விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கி 2 மணி நேரமான நிலையில், 5 கி.மீ தூரம் கடந்துள்ளது.
17:00 December 29
இறுதி சடங்கினைக் காண எல்இடி திரைகள்!
விஜயகாந்தின் இறுதி சடங்கினைக் காண பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்படாத நிலையில், தேமுதிக அலுவலகம் முன்பு எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
16:32 December 29
இறுதி சடங்கில் பங்கேற்க ஓபிஎஸ் வருகை!
விஜயகாந்த் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கேயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
16:18 December 29
கண்ணீர் வெள்ளத்தில் தேமுதிக அலுவலகம்!
இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்த் உடல் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தின் வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு உள்ளனர்.
16:12 December 29
பாதுகாப்பு பணியில் 500 போலீசார்
நடிகர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
16:12 December 29
இறுதி சடங்கில் அமைச்சர்கள் பங்கேற்பு!
மறைந்த விஜயகாந்தின் இறுதி சடங்கில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
16:09 December 29
Captain Vijayakanth Funeral live: விஜயகாந்துக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்
நடிகர் அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோரை வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
16:09 December 29
Captain Vijayakanth Funeral live: ஒலிப்பெருக்கியில் வேண்டுகோள் விடுத்த பிரேமலதா
விஜயகாந்தின் இறுதி ஊர்வல வாகனத்தில் உள்ள பிரேமலதா, வாகனம் செல்ல ஒத்துழைப்பு கொடுக்குமாறு ஒலிபெருக்கியில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்
16:07 December 29
Captain Vijayakanth Funeral live: சந்தன பேழையில் இடம் பெற்றிருக்கும் வாசகம்!
அடக்கம் செய்யப்படும் சந்தன பேழையில் 'புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என பொரிக்கப்பட்டுள்ளது.
16:00 December 29
Captain Vijayakanth Funeral live: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!
இறுதிச் சடங்கு நடைபெறும் தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.
15:55 December 29
இறுதிச் சடங்களில் பங்கேற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை
கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் பகுதிக்கு வந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க காத்திருக்கிறார்.
15:54 December 29
சந்தனப்பேழையில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
நடிகர் விஜயகாந்த் உடலை நல்லடக்கம் செய்வதற்கு சந்தனப்பேழை தயார் செய்யப்பட்டுள்ளது.
15:46 December 29
இறுதி நிகழ்வில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி
விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இறுதி நிகழ்வில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
15:45 December 29
மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் விஜயகாந்த் உடல்
பல்லாயிரக்கணக்கான மக்களை சாலையோரங்களில் நின்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் கோயம்பேடு நோக்கி விஜயகாந்த் உடல் ஊர்வலமாக செல்கிறது.
15:44 December 29
Captain Vijayakanth Funeral live: 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்த தயாரான காவல்துறையினர்!
மறைந்த விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்க காவல்துறையினர் தயாராக உள்ளனர்.
15:41 December 29
Captain Vijayakanth Funeral live: இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்!
விஜயகாந்தின் இறுதி சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
15:19 December 29
Captain Vijayakanth Funeral live: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
இன்று மாலை 4.45 மணிக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
15:17 December 29
Captain Vijayakanth Funeral live: இ.வி.ஆர் சாலையை தவிர்க்குமாறு போலீசார் வேண்டுகோள்!
சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்வதற்காக கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ஊர்வலம் முடியும் வரை பொதுமக்கள் இ.வி.ஆர் சாலையை தவிர்க்குமாறு போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
15:12 December 29
Captain Vijayakanth Funeral live: மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!
விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், கட்சி தொண்டர்கள், மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
14:52 December 29
Captain Vijayakanth Funeral live: தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு நோக்கி தொடங்கிய இறுதி ஊர்வலம்!
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். இது அவருக்கு உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். விஜயகாந்த் மறைவால் தமிழ்நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (டிச.29) காலை அவரது உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கிருந்து கோயம்பேடு நோக்கி இறுதி ஊர்வலமானது தொடங்கியுள்ளது. மேலும், 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்படவிருக்கிறது.