ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு நிகழ்சிகளை தனியார் சேனல்களில் ஒளிபரப்ப உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம் - High Court chennai

சென்னை: கரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பும்படி தனியார் தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : May 28, 2021, 11:06 PM IST

சென்னை திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “கரோனா தொற்று, அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் ஊரடங்கு ஆகியவை காரணமாக மக்கள் பெரும் மன அழுத்தத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

சக மனிதர்களால் புறக்கணிக்கப்படுவதால், கரோனா தொற்று பாதித்தவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் கரோனா பற்றி, தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கரோனா குறித்த உண்மை தகவல்களை இணையதளங்களில் வெளியிட்டால் மட்டுமே மக்கள் மனதிலுள்ள அச்ச உணர்வைப் போக்க முடியும் என்பதால், இரவு 7 மணி முதல் 8 மணி வரையோ அல்லது 8 மணி முதல் 9 மணி வரையோ ஒரு மணி நேரம் அரசு, தனியார் தொலைக்காட்சிகளில் கரோனா குறித்த அறிவுரைகள், தடுப்பூசி, சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தனியார் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்த முடியாது எனவும்; செய்தித் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை கரோனா குறித்த செய்திகளை ஒளிபரப்பாமல் தவிர்க்க முடியாது எனவும்; செய்திகளில் ஏதேனும் தவறு இருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஏற்கெனவே விழிப்புணர்வு செய்திகளை ஒளிபரப்பி வருவதாகவும், தடுப்பூசி போடும்படி மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள், பொது நலனைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது குறித்து மத்திய, மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: சென்னையை முந்தியது கோயம்புத்தூர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.