ETV Bharat / state

தேர்தலில் தன்னை தக்கவைக்குமா தேமுதிக? - தேசிய முற்போக்கு திராவிட கழகம்

2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, அமமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தேமுதிக குறைந்தபட்சம் எட்டு தொகுதிகளில் வெற்றிபெற்றால்தான் கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

Can dmdk retain his party recognition in the Assembly elections?

author img

By

Published : Mar 30, 2021, 3:45 PM IST

தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக அடுத்தடுத்த தேர்தல்களில் ஒரு சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத் தொகுதியில்கூட வெற்றிபெற இயலாமல் கட்சியின் பலத்தையும் செல்வாக்கையும் இழந்துள்ளது.

நடைபெறவிருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, அமமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தேமுதிக குறைந்தபட்சம் எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு செப்டம்பரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அதில், விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 8.4 விழுக்காடாக இருந்தது. பிறகு நடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. எனினும் கட்சியின் வாக்கு வங்கி 10.1 விழுக்காடாக அதிகரித்தது.

இதையடுத்து தேமுதிக, 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் களம்கண்டது. இதில், 21 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 7.9 விழுக்காடாக இருந்தது. முக்கிய திராவிட கட்சியான திமுகவைப் புறந்தள்ளி தேமுதிக இரண்டாவது பெரிய கட்சியாக தமிழ்நாட்டில் உருவெடுத்தது. மேலும், விஜயகாந்த் தலைமையில் 21 வேட்பாளர்களும் எதிர்க்கட்சி இருக்கைகளில் அமர்ந்து ஆளும் அதிமுகவுக்குச் சவால் கொடுத்தனர்.

பிறகு, அதிமுக-தேமுதிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியான பாஜக தலைமையில் பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதில் தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்ற நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். தேமுதிக 5.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்தான் தேமுதிகவுக்கு ஒரு சாபமான தேர்தல். கூட்டணி அமைப்பதில் தேமுதிக நிர்வாகிகளிடையே குழப்பம் நிலவியது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தனது கட்சியில் இணையும் என்பதை மறைமுகமாக ஒரு பழமொழியின் மூலம் சொல்லியிருந்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் தேமுதிக மக்கள் நல கூட்டணி அமைத்து 104 தொகுதிகளில் தேர்தலைச் சந்தித்தது. தேமுதிகவின் பெரும்பாலான வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்.

இது தேமுதிகவுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. இதில் தேமுதிகவின் வாக்கு 2.41 விழுக்காடாகச் சரிந்தது. பின்னர் 2019இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒன்றில்கூட வெற்றிபெற முடியாமல் வெறும் 2.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.

2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் தேமுதிக தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது பற்றி கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தேமுதிக 60 தொகுதிகளில் நிறைய தொகுதிகளில் வெற்றிபெறும் சூழல் உள்ளது. மேலும் கட்சி 15 முதல் 20 விழுக்காடு வாக்குகளைப் பெறும்" என நம்பிக்கைத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தேமுதிக எப்பொழுதுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும் எனவும் கூறினார்.

இது பற்றி அரசியல் விமர்சகர் அ. மார்க்ஸ் கூறுகையில், "தேமுதிகவைப் பொறுத்தவரை தனது கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புகள் குறைவு. பத்தாண்டுகளுக்கு முன்பு நல்ல வாக்கு வங்கிகளைப் பெற்ற தேமுதிக, கடந்த ஆண்டுகளில் இரண்டு அல்லது மூன்று விழுக்காடு வாக்குகளை மட்டும் பெற முடிந்தது. மேலும், கட்சிக்குப் பலம் குறைந்ததாகவே உள்ளது" என்றார்.

ஒரு கட்சி மொத்த வாக்குகளில் 6 விழுக்காடு வாக்குகளைப் பெற வேண்டும். இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் எட்டுத் தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இந்தத் தகுதிகளைக் கொண்டிருக்கும் கட்சி, மாநில அரசியல் கட்சியின் அங்கீகாரத்தைப் பெறும்.

ஆனால், தான் வெளியேறிய கூட்டணியையும், தற்போது உள்ள கூட்டணியையும் விமர்சித்து தேமுதிகவின் பரப்புரை மேற்கொள்ளும் சூழல் அதிகளவில் உள்ளதால், தனது வாக்கு வங்கியை தேமுதிக அதிகரிக்குமா என்ற கேள்வி தானாக எழுகிறது. இருப்பினும், தேர்தலில் மக்களின் தீர்ப்பு வரும்வரை தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகுமா என்பதைப் பொருத்திருந்தே காண வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.