ETV Bharat / state

கரோனா கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு! - MHC order

சென்னை : தனியார் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Aug 5, 2020, 3:30 PM IST

தமிழ்நாட்டில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்துவதில் அரசின் மெத்தனம் குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தகுந்த இடைவெளி உள்ளிட்ட எவ்விதமான கரோனா கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படுவதில்லை. கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நீதிமன்றம் உடனடியாக இதில் தலையிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று (ஆகஸ்ட் 5) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜயநாராயண், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கடமையை செய்து வருகிறார். அதில் எவ்விதமான தவறும் இல்லை. இந்த வழக்கை தொடர்ந்துள்ள மனுதாரர் டிராபிக் ராமசாமிக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்குகளை தள்ளுபடி செய்து அபராதம் விதித்துள்ளது. இன்னும் அந்த அபராதத் தொகையை அவர் கட்டவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதே வேளையில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அரசு விழாக்களில் பங்கேற்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனியார் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.