ETV Bharat / state

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 எப்போது? - அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை! - chennai latest news

நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) நடைபெற்றது.

முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
author img

By

Published : Mar 5, 2022, 10:57 PM IST

சென்னை : 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய பின்பு, உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

பின்னர், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 18ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது, நிதிநிலை தாக்கல் செய்த மறுநாள் அதாவது மார்ச் 19ஆம் தேதி வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையையும் வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம்

இந்நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன், காந்தி, சிவசங்கர், ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது போன்ற தேர்தலில் திமுக அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், நகர்ப்புற பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிப்பது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவது, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் ஆட்சியர்களுடன் மாநாடு - ஸ்டாலினின் 'சிறப்பான' வியூகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.