இது குறித்து, சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிராஜன்,
"தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் என். பாலமுருகன் தலைமையில் ஒன்பது நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மூலம் அரசு வாகனத்தை வைத்து அதிமுக அரசு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்துவருகிறது.
என்ன விலை கொடுத்தேனும் இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே அதிமுக தலைமை இப்படி செய்துவருகிறது. இது குறித்து ஆதாரத்துடன் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்" என்றார்.
மேலும் படிங்க: நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி