ETV Bharat / state

தொழிலதிபர் கடத்தல் வழக்கு: பயங்கரவாதி தவ்ஃபீக் குறித்து திடுக்கிடும் தகவல்கள் - Terrorist issue

சென்னை: தொழிலதிபர் கடத்தலில் தொடர்புடைய பயங்கரவாதி தவ்ஃபீக் குறித்து பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவ்ஃபிக்
பயங்கரவாதி
author img

By

Published : Aug 29, 2020, 2:10 PM IST

சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர் கடத்தல் விவகாரத்தில் பயங்கரவாதி தவ்ஃபீக் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலர் போல் நடித்து கடத்தியது தெரியவந்தது. தொழிலதிபர் அக்பர் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, என்ஐஏ அலுவலர் போல் நடித்து பணத்தைப் பறித்துள்ளார். இந்நிலையில், இந்த தவ்ஃபீக் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த தவ்ஃபீக்?

தவ்ஃபீக் மீது 14க்கும் மேற்பட்ட வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 2002 முதல் 2008ஆம் ஆண்டு வரை பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தார். குறிப்பாக 2002இல் மும்பையில் பேருந்தில் குண்டு வைத்தது தொடர்பாக, இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக உத்தரப்பிரதேசம் நொய்டாவில் கைது செய்யப்பட்ட தவ்ஃபீக் 2015ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு சிறையில் இருந்து வெளியான தவ்ஃபீக் 'நாம் மனிதர் கட்சி', என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்தார்.

'இறைவன் ஒருவனே மற்றும் இஸ்லாமிய தற்காப்புப் படை' போன்ற அமைப்பை உருவாக்கி, தீவிரவாத கும்பலுக்கு ஆள்சேர்க்கும் பணியிலும், நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டதாலும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதிராம்பட்டினம் கொலை வழக்கு எனப் பல கொலை வழக்குகளும் தவ்ஃபீக் மீது நிலுவையில் உள்ளன. மேலும் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பயங்கரவாத அமைப்பிற்கு உதவியதும் தெரிய வந்துள்ளது.

பல பயங்கர வழக்குகளில் தொடர்புடைய தவ்ஃபீக் தொடர்ந்து, ஹவாலா பரிமாற்றத்தில் சென்னையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு உளவுத்துறை மற்றும் க்யூ பிரிவு ஆகியோர், தவ்ஃபீக் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தவறி உள்ளதா எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணையைத் தொடங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: நோ புரோக்கர்.காம் இணையதளத்தில் வீட்டு மோசடி செய்த தம்பதி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.