சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று (அக். 7) காலை டெல்லி விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளைப் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ் (30) என்பவரின் உடமைகளைச் சோதனை செய்தபோது அபாயகரமான பொருள் இருப்பதாக அலாரம் ஒலித்தது.
உடனே பாதுகாப்பு அலுவலர்கள் சூட்கேஸை திறந்துப் பார்த்ததில், விக்னேஷின் ராணுவ உடையில் துப்பாக்கித் தோட்டா ஒன்று இருந்தது. அதைப்பற்றி விக்னேஷிடம் அலுவலர்கள் விசாரித்தபோது, ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றிவருகிறேன். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துவிட்டு பணிக்குச் செல்கிறேன் என்றார்.
விமானத்தில் துப்பாக்கி, தோட்டா போன்ற அபாயகரமான பொருள்களைக் கொண்டுசெல்ல கூடாது என்பதால் அவரது பயணத்தை ரத்துசெய்து விசாரித்துவருகின்றனர்.
விசாரணைக்குப் பின் துப்பாக்கி தோட்டா பறிமுதல்செய்து அனுப்பிவைக்கப்படுவார் என அலுவலர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக விமான நிலைய காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீநகரில் பயங்கரம்; 2 ஆசிரியர்கள் சுட்டுக்கொலை!