சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகள் மக்கள் நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ உதவுகின்றன. கரோனா பரவலை தடுக்க ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.
தற்காலிக தீர்வையும், பக்க விளைவுகளையும் தரும் அலோபதி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய - மாநில அரசுகள், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
தற்போது தமிழ்நாட்டில் கரோனா பரவல் தீவிரமாகியிருப்பதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார். இந்த மனுவானது, நாளை (மே. 5) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பருகுங்க உயிர்காக்கும் அருமருந்தை; விரட்டுங்க கரோனாவை - காப்பானாய் களமிறங்கிய சித்தா!