கடும் நிதி நெருக்கடியில் பிஎஸ்என்எல் சிக்கி தவித்துவருகிறது. இது குறித்து, பிஎஸ்என்எல் தலைவர் பிரவீன்குமார் பர்வார், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு வருமானத்தை ஈட்ட திட்டமிட்டுள்ளது. நிறுவனத்திற்குச் சொந்தமான 14 ஆயிரம் கோபுரங்கள் எற்கனவே மற்ற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மேலும் சில கோபுரங்களை குத்தகைக்கு விடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளோம், 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டாலும் ஒரு லட்சம் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள், தேவைப்பட்டால் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.