ETV Bharat / state

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்னைக்கு உயர் நீதிமன்றம் தீர்வு! - bsnl employe salrey court order

தமிழ்நாடு முழுவதும் பிஎஸ்என்எல் அலுவலகங்களில் பணியாற்றிய 3 ஆயிரத்து 528 ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கியில் 40 ஆயிரம் ரூபாயை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bsnl employees salary settlement
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்னைக்கு தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்
author img

By

Published : Nov 6, 2020, 5:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த பணியாளர் சங்கம், தமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை 60 கோடி ரூபாயில் 25 விழுக்காடான 15 கோடி ரூபாயை இந்த வழக்குகளுக்காக உருவாக்கப்பட்ட கணக்கில் செலுத்தப்பட்டதாக பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீண்ட நாட்களாக ஊதியம் முறையாக வழங்கப்படாதது மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதை கருத்தில் கொண்டு 15 கோடி ரூபாயை, 3 ஆயிரத்து 528 ஒப்பந்த பணியாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க தொழிலாளர் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொருவருக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை விட நிலுவை ஊதியம் குறைவாக இருந்தால் அதை மட்டும் வழங்கினால் போதும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடைமுறையை மேற்கொள்ள, தொழிலாளர் ஆணையருக்கு உதவுவதற்காக, இந்த விவகாரம் குறித்து முழுமையாக அறிந்த மூன்று நபர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டுமென எனக் குறிப்பிட்ட நீதிபதி, அந்த குழுவிடம் ஒப்பந்த பணியாளர்களின் விவரங்களை முழுமையாக வழங்க வேண்டுமென பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நவம்பர் 10, 11, 12 தேதிகளில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு ஆதாரங்களை சரிபார்த்த பின் ஊதிய தொகையை வழங்கவேண்டுமெனவும், இந்த நடைமுறைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை நவம்பர் 25ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க: கிராம சபை கூட்டம் ரத்து வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.