சென்னை: அயனாவரம் மார்க்கெட் சாலை பகுதியைச் சேர்ந்தவர், நாகூர்கனி (33). இவர் அயனாவரம் யுஐ நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரயாணி கடை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கே.கே.நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்த சேகர் என்பவர் இந்த பிரியாணி கடைக்குச் சென்று திமுக சேர்மன் என்று கூறி பிரியாணி, பரோட்டாவை வாங்கி விட்டுப் பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.
நாகூர்கனி பணம் கேட்கும்போது, 'திமுக சேர்மனிடமே பணம் கேட்கின்றாயா, பணம் தரமுடியாது' என மிரட்டல் விடுத்து, பிரியாணியை வாங்கிச்சென்றுள்ளார். இதேபோல் நேற்று (மார்ச் 1) இரவு வழக்கம்போல் பிரியாணி கடைக்கு வந்த சேகர், பிரியாணி கேட்டதற்குக் கடை உரிமையாளர் நாகூர்கனி பிரியாணிக்கு பணம் கேட்டார். அதற்கு சேகர் தகாத வார்த்தையால் திட்டி, உன் கடையை நடத்தவிடாமல் செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பதற்றமடைந்த நாகூர்கனி, தனக்கு மிரட்டல் விடுத்த சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பல்பொருள் அங்காடியில் திருட்டு...வெளியான சிசிடிவி காட்சிகள்!