ETV Bharat / state

நகை, பணத்துடன் புதுமணப் பெண் மாயம்; தாம்பரம் போலீசார் விசாரணை

சென்னையில் திருமணமான புதுமணப் பெண் 17 சவரன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணத்துடன் மாயமானதால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை பணத்துடன் புதுமணப் பெண் மாயம்
நகை பணத்துடன் புதுமணப் பெண் மாயம்
author img

By

Published : Oct 20, 2022, 6:24 PM IST

சென்னை: மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50). இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மேகலா இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் நடராஜன்(30) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அபிநயா(28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த 17 சவரன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன் அபிநயா திடீரென மாயமாகி உள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் நடராஜன் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பீதியை ஏற்படுத்தும் கழிவுநீர் வடிகால் பணி; குழந்தைகள் மையத்திற்கு வரும் குழந்தைகள் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.