சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாமினை இன்று (அக்.08) சென்னை மாநகராட்சி ஆணையர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர், ரேபிஸ் தடுப்பூசியை வளர்ப்பு நாய்களுக்கு செலுத்தினார்.
இதன் பிறகு அவர் கூறுகையில், "பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு கடந்த 9 மாதங்களில் 11,220 இனக்கட்டுபாடு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதேப்போல் 2022 ஆம் ஆண்டு 16ஆயிரத்து 713 இனக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு 26ஆயிரத்து 140 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கபட்டுள்ளது" என்றார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆயிரத்து 176 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. வெறிநாய்க் கடி நோய் இல்லா சென்னை உருவாக்க சென்னை திருவிக நகர், நுங்கம்பாக்கம், கண்ணாம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 50 அடி உயர் டேங்க் மீது ஏறிவிட்டு கீழே இறங்க முடியாமல் தவித்த கல்லூரி மாணவி பத்திரமாக மீட்பு!