சென்னை கொன்னுர் அருகே திருவீதி அம்மன் கோயில் உள்ளது. நேற்று (டிச.4) இந்த கோயிலின் நடையை அதன் தலைவர் ராஜேந்திரன் பூட்டிச் சென்றார்.
இன்று (டிச.5) காலை நளினி என்பவர் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். பின்னர் அவர் கோயில் தலைவர் ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தார்.
தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது கோயிலின் உண்டியலில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. தற்போது பணத்தை திருடிச் சென்ற நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உண்டியல் பணம் திருட்டு: சிசிடிவி வெளியீடு