ETV Bharat / state

தாம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகைகள் கொள்ளை! - Chennai Jewel Theft Cases

சென்னை: தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்க நகைகள், இரண்டு மடிக்கணினிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகைகள் கொள்ளை  தாம்பரம் நகைக் கொள்ளை  சென்னை நகைக் கொள்ளை  சென்னை நகைத் திருட்டு வழக்குகள்  Break the lock of the house in Tambaram and loot 6 shavaran jewels  Tambaram Jewel Theft  Chennai Jewel Theft Cases  Jewel Theft In chennai
Tambaram Jewel Theft
author img

By

Published : Jan 30, 2021, 7:33 AM IST

சென்னை, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், ஏ.எல்.எஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(30). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 25 ஆம் தேதி கார்த்திகேயன் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம், தொட்டியம் கிராமத்திற்குச் சென்றுவிட்டு நேற்று(ஜன.29) வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 6 சவரன் தங்க நகைகள், 2 மடிக்கணினிகள் கொள்ளைப் போயிருந்தது தெரியவந்தது.

உடனடியாக இது குறித்து சேலையூர் காவல்நிலையத்திற்கு கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி, கொள்ளைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி கணக்கு காட்டி ரூ.22 கோடி ஜிஎஸ்டி வரிப்பலன் பெற்றவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.