சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் பாபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது புதிதாக வாங்கிய ஸ்கூட்டரை நேற்றிரவு வீட்டருகே நிறுத்தி வைத்திருந்தார். இந்த ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்கில் அடையாளம் தெரியாத இருவர் இருவர் மண்ணை அள்ளிப்போடுவதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் இருவரும் தாங்கள் வந்திருந்த பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாபு, அயனாவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, இருசக்கர வாகன டேங்கில் மண்ணை அள்ளிப்போட்டது பெரம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பாரதி எ தனிஷ் (19) மற்றும் அவரது நண்பர் முகமது அப்சல்(19) என்பது தெரியவந்தள்ளது.
இவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, பாபுவின் மகளுக்கும் பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருப்பதும், இருவரும் நட்பாக பழகி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதோடு தினமும் பாரதி அந்த மாணவியை தனது பைக்கில் கல்லூரிக்கு அழைத்து செல்வதும், பின்னர் கல்லூரி விட்ட பிறகு மீண்டும் அவரை வீட்டில் விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதே போல கடந்த ஆறு மாதங்களாக பாரதியும், பாபுவின் மகளும் சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபு தனது மகளுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் அவர் தனது வாகனத்திலேயே கல்லூரிக்கும், வீட்டிற்கும் சென்று வந்துள்ளார்.
இதற்கிடையே பாரதி அந்த பெண்ணை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். தன் காதலுக்கு அவருடைய பெண் தோழி மறுப்பு தெரிவித்துடன் பாரதியுடனான நட்பை நிறுத்திக்கொண்டார். இதனால் மனவேதனையடைந்த பாரதி புதிய வாகனத்தால்தான் தன்னுடன் பைக்கில் வரவில்லை என்றும், அதனால் தான் தனது காதலை ஏற்றுகொள்ளவில்லை என்றும் கோப்பட்டு, தன் பெண் தோழியின் இருசக்கர வாகனத்தை ரிப்பேர் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது நண்பருடன் இணைந்து பெண்ணின் இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கில் மண்ணை அள்ளிக்கொட்ட முற்பட்டு சிக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சென்னை கலாக்சேத்ரா கல்லூரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்